உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி அம்மன் கோவில்களில் நாளை (நவம்., 25ல்) கும்பாபிஷேகம்

திருத்தணி அம்மன் கோவில்களில் நாளை (நவம்., 25ல்) கும்பாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி அடுத்த, பொன்பாடி கிராமத்தில், பழைய வாய்ந்த உமாமகேஸ்வரி சமேத நாகேஸ்வரர் மற்றும் படவேட்டம்மன் ஆகிய கோவில்களில், திருப்பணிகள் நடந்தன.

இதையடுத்து, நாளை (நவம்., 25ல்)காலை, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இன்று (நவம்., 24ல்) காலை, 8:00 மணிக்கு இரு கோவில்களிலும் கணபதி ஹோமம், மஹா சங்கல்பம், லட்சுமி, நவகிரக பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.தொடர்ந்து, கரிகோலம் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. நாளை (நவம்., 25ல்) காலை, 8:30 மணிக்கு, நாகேஸ்வரர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகமும், காலை, 9:30 மணிக்கு படவேட்டம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பொன்பாடி கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !