பம்பையிலிருந்து சன்னிதானம் வரை 15 அவசர சிகிச்சை மையங்கள்
ADDED :2542 days ago
சபரிமலை, பம்பை முதல் சன்னிதானம் வரை மலைப்பாதையில் 15 அவசர மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சுகாதாரப்பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. இதில் 3 கி.மீ. செங்குத்தான பாதை. இந்த பகுதியில் மலையேறும் பக்தர்கள் பலர் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக இந்த பாதையில் 15 அவசர மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மூச்சுதிணறலுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால் இவர்கள் பம்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதற்காக இரண்டு ஆம்புலன்சுகள் சன்னிதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.கொசு மருத்து அடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு திறக்கப்பட்ட சன்னிதானம் அரசு மருத்துவமனையில் அனைத்து வகை நோய்களுக்கும் நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது.