உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் லட்சத்தீப விழா

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் லட்சத்தீப விழா

தாடிக்கொம்பு: கார்த்திகை தீபா விழாவை முன்னிட்டு, தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் லட்சதீப சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி எழுந்தருளலும், தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோயிலை சுற்றி ஒரு லட்சம் கார்த்திகை தீப விளக்குகளை பக்தர்கள் ஏற்றினர். தேர்க்கால் அருகே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வாண வேடிக்கை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !