திருப்பதி திருமலையில் வனபோஜன உற்சவம்
ADDED :2565 days ago
திருப்பதி: கார்த்திகை மாத வன போஜன உற்சவ திருவிழா திருப்பதி திருமலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதற்காக அலங்கரிக்கப்பட்ட மலையப்பசுவாமியை பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வனத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சுவாமிக்கு சிறப்பாக திருமஞ்சன நீராட்டு உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றது. பிறகு அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டது. கடந்த ஐநுாறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த விழாவினை பழமை மாறாமல் இப்போதும் நடத்திவருவது இதன் சிறப்பாகும்.