உடுமலை சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2600 days ago
உடுமலை:உடுமலை அருகே பள்ளிவலசு கிராமத்தில், சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கிராமத்தில், புதிதாக, சக்தி விநாயகர் கோவில், கட்டப்பட்டு, கோபுர விமான கலசம் நிறுவுவதல், முதற்கால வேள்வியோடு, கும்பாபிஷேக விழா துவங்கியது.நேற்றுமுன்தினம் நவ 25 ல், காலை இரண்டாம் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், திருக்குடங்கள் புறப்பாடு தொடர்ந்து, கோபுரம் மற்றும் மூலவருக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. பள்ளிவலசு மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனர். கோவிலில், 24 நாட்களுக்கு, மண்டாலாபிஷேக பூஜைகள் நடக்கிறது.