உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவசம் போர்டு கமிஷனர் இந்துவாக இருக்க வேண்டும்: கேரள ஐகோர்ட் உத்தரவு

தேவசம் போர்டு கமிஷனர் இந்துவாக இருக்க வேண்டும்: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில், திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம் போர்டுகளின் கமிஷனர் இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3,000 கோவில்கள்: கேரளாவில், 3,000 கோவில்களை நிர்வகிக்க, ஐந்து தேவசம் போர்டுகள் உள்ளன. குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சி, கூடல் மாணிக்கம் என ஐந்து தேவசம் போர்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில், திருவிதாங்கூர் - கொச்சி இந்து மத நிலையங்கள் சட்டம் - 1950ல் சமீபத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திருவிதாங்கூர் போர்டுகளின் கமிஷனராக, இந்து அல்லாதவரையும் நியமிக்க முடியும்.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் பா.ஜ., மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்ட பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ராமசந்திர மேனன், தேவன் ராமசந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறபித்த உத்தரவில், இரண்டு தேவசம் போர்டுகளின் கமிஷனர் என்பவர் இந்துமதத்தை பின்பற்றுபவராக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !