திருமங்கலம் கோயில்களுக்கு தேவை புதிய பாலங்கள்
ADDED :2617 days ago
திருமங்கலம்:திருமங்கலம் ஆஞ்சநேயர்,காட்டு பத்ரகாளியம்மன், விநாயகர், குமரன் கோயில் களுக்கு செல்ல வடகரை கால்வாயை கடக்க வேண்டும். இந்த இடங்களில் கட்டப்பட்ட பாலங்கள் 80 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி உள்ளதால் தற்போது வலுவிழந்து உள்ளது. பல இடங்களில் இடிந்து சேதமடைந்துள்ளது.காட்டு பத்ரகாளியம்மன் கோயில், விநாயகர் கோயிலுக்கு செல்லும் பாலங்களை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த நான்கு கோயில்களுக்கும் சென்று வர வசதியாக பழைய நான்கு பாலங்களை அகற்றி புதிய பாலம் கட்டித்தர வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.