திருப்பூர் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2522 days ago
திருப்பூர் : திருப்பூர், சிறுபூலுவப்பட்டி, கீதா நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 24ம் தேதி துவங்கியது.விழாவில், 25ம் தேதி காலை, திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசையுடன் துவங்கிய விழாவில், காலை, 7:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி ஆகியோர், கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
சுற்றுவட்டாரத்திலுள்ள பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மகா அபிஷேகம், தச தரிசனம் நடந்தது. சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை மற்றும் கீதாநகர், சிறுபூலுவப்பட்டி பொதுமக்கள், கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.