கிருஷ்ணகிரி கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் திருக்கல்யாணம்
கிருஷ்ணகிரி: கந்திக்குப்பம் காலபைரவர் கோவிலில், பைரவ நாதர், திரிபுர அம்மையார் திருக்கல்யாணம், நேற்று (நவம்., 28ல்) நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த, கந்திகுப்பத்தில் உள்ள காலபைரவர் கோவிலில், கால பைரவாஷ்டமி பெருவிழா, கடந்த, 25 காலை, 7:30 மணிக்கு, கொடியேற்றுத்துடன் துவங்கியது. 26ல்,
திருமுருகன் தீந்தமிழ் வேள்வி, வள்ளி தேவசேனை உடனமர் சுப்பிரமணிய பெருமாள் நகர்வலம், சிறப்பு பூஜைகளும், 27ல், சொர்ணாகர்ஷண பைரவர் வேள்வி, சுவாமி நகர்வலம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று (நவம்., 28ல்) காலை, 9:00 மணிக்கு, பைரவ நாதர், திரிபுர பைரவி திருக்கல்யாணம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 12:00 மணிக்கு, சமூக முன்னேற்றத்தில், சைவ சமயத்தின் பங்கு என்ற தலைப்பில், பவானி தியாகராசன் சொற்பொழிவும், மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு அம்மையப்பர் நகர்வலம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, இரவு, 7:00 மணிக்கு, இந்து சமய தனிச்சிறப்பு ஆண்டவன் பெருமையா, அடியவர் பெருமையா என்ற தலைப்பில்,
சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.