கோபி ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவம்
ADDED :2619 days ago
கோபி: கோபி, ஐயப்பன் கோவிலில், பிரமோற்சவம், சங்காபி ஷேகம், லட்சார்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி விழா கோலாகலமாக நடந்தது.
கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கிய பிரமோற்சவ விழா, டிச., 14 வரை நடக்கிறது. தினமும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
கணபதி, பாலமுருகன் அலங்காரம், ஆதிகேசவ பெருமாள், அர்த்தனாரி ஈஸ்வரர் என, உற்ச வர்கள் காட்சியளித்தனர். அந்த வரிசையில், உற்சவர் மஞ்சமாதா அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். தினமும், 70க்கும் மேற்பட்டோர், மாலை அணிந்து விரதத்தை துவக்கியுள் ளனர். கார்த்திகை பிறப்பு முதல், இதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்துள்ளதாக, கோவில் நிர்வாகி கண்ணன் தெரிவித்தார்.