/
கோயில்கள் செய்திகள் / ஈரோடு, கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா: பூச்சாட்டுதலுடன் தொடக்கம்
ஈரோடு, கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா: பூச்சாட்டுதலுடன் தொடக்கம்
ADDED :2525 days ago
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில், குண்டம் பொங்கல் தேர்த் திருவிழா, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஈரோடு, கருங்கல்பாளையத்தில் எழுந்தருளி யுள்ள, சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில், குண்டம், பொங்கல் தேர்திருவிழா, கடந்த, 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்றிரவு, மூலவர் அம்மனுக்கு, மலர்கள் சாற்றப்பட்டது. சிறப்பு பூஜை, அதன் பின், குண்டம் அமையும் இடத்தில் மலர்கள் தூவப்பட்டு, விழா தொடங்கியது.
இன்று (நவம்., 29ல்), கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து வரும், டிச.,9ல் குண்டம் இறங்குதல், தேர்வடம் பிடித்தல், 10ல் கோவில் கரகம், 11ல் மாவிளக்கு, பொங்கல் வைத்தல், 12ல் கம்பம் எடுத்தல், 13ல் மஞ்சள் நீராட்டு அம்மன் திருவீதி உலா, 14ல்., அம்மன் நிலை சேருதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.