உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரியில் கணபதி கோவிலில் கும்பாபிஷேகம்

கோத்தகிரியில் கணபதி கோவிலில் கும்பாபிஷேகம்

கோத்தகிரி : கோத்தகிரி ஆவுக்கல் மாரீஸ் நகர் செல்வ கணபதி கோவிலில் மகா கும்பாபிஷே கம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, 24 காலை, 6:00 மணிக்கு, மங்கள இசை தேவா பாராயணம், திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி இடம் பெற்றது.

மறுநாள் காலை, 7:30 மணிமுதல், 9:00 மணிவரை, இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், பிம்ப சுத்தி, தீபாராதனை மற்றும் கடம் புறம்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து, கிராம மக்கள் முன்னிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கணபதி சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், மாரீஸ் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர், கிராம இளைஞர் மன்றத்தினர் மற்றும் ஊர் மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !