உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் அருகில் வீரியபாளையத்தில் குண்டம் இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

கிருஷ்ணராயபுரம் அருகில் வீரியபாளையத்தில் குண்டம் இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

கிருஷ்ணராயபுரம்: வீரியபாளையம் கிராமத்தில், ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள், அக்கினிக் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரியபாளையம் மாரியம்மன் கோவில் முன், இதற்காக அக்கினி குண்டம் உருவாக்கப் பட்டது. அதில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல, மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், இறங்கி
நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில், வீரியபாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐயப்ப பக்தர்கள் சார்பில், அனைவருக்கும்
அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !