திருப்பாச்சேத்தியில் உலக நன்மை வேண்டி யாகம்
திருப்புவனம்:திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆந்திர, தமிழக பக்தர்கள் சார்பில் ராஜமார்த்தாண்ட பைரவர் யாகம் தொடங்கியது. திருப்பாச்சேத்தியில்ஆயிரத்து 200 ஆண்டு பழமை வாய்ந்த சிவாலயம் அழகியநாதர் திருக்கோயில் உள்ளது. நள மகராஜாவால் கட்டப்பட்ட இந்த சிவாலயத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீஜ்வாலா ப்ரயோக சென்ட்ரல் டிரஸ்ட், சென்னை ஸ்ரீ ஜ்வாலா டிரஸ்ட் சார்பாக உலக நன்மை வேண்டி ராஜமார்த்தாண்ட பைரவர் யாகம் நேற்று (நவம்., 29ல்) தொடங்கியது. இரண்டு வாகனங்களுடன் கூடிய பைரவர் திருப்பாச்சேத்தி சிவாலயத்தில் உள்ளார். எனவே இங்கு உலக நன்மை வேண்டி பைரவருக்கு சிறப்பு பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டு ஸ்ரீதர் குருஜி தலைமையில் இரண்டு நாள் நடைபெறும் பூஜையில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
நேற்று (நவம்., 29ல்) காலை தொடங்கிய பூஜை நாளை மாலை ஆறு மணிக்கு முடிவடைகிறது. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் உலக நன்மைக்காக நடத்தப்படும் இப்பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.