உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

வால்பாறை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

வால்பாறை:சோலையாறு எஸ்டேட் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. வால்பாறை அடுத்துள்ள சோலையாறு முதல் பிரிவு மாரியம்மன் கோவிலில், கடந்த, 27ம் தேதி கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவங்கியது.மூன்று கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று (நவம்., 29ல்) காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு மண்டல பூஜை, யாத்ர தானம், குடம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.அதன் பின், பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை பக்தர்கள் எடுத்து கோவிலை வலம் வந்தனர். காலை, 10:30 மணிக்கு கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்காரபூஜையும் நடந்தது.

கும்பாபிஷேகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !