மொடக்குறிச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :2535 days ago
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா, கடந்த, 13ல் பூச்சாட்டு தலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று (நவம்., 29ல்) நடந்தது. காலை, 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல், மாலையில் திருவீதி உலா மற்றும் தேர்நிலை சேருதல் நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து அதிகாலையில், தெப்போற்சவம் நடந்தது. மஞ்சள் நீராட்டத்துடன், சுவாமி திருவீதி உலா, நாளை (டிச., 1ல்) நடக்கிறது.