உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை

திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு ஆறு கால சிறப்பு பூஜை நடந்தது. பதினெட்டு வகை அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதில் திண்டுக்கல் மட்டுமின்றி கரூர், சேலம், திருச்சி மாவட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் பழநி திருஆவினன்குடி கோயில் பைரவருக்கும் சிறப்பு பூஜை வெள்ளி கவச அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !