திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் 100வது ஜெயந்தி விழா
ADDED :2547 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், 100வது ஜெயந்தி விழாவில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், 100வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நடந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜையில் ஏராளமான யோகிராம் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, ஆஸ்ரமத்தில் ஸ்ரீமுரளீதர சுவாமிஜி பிரசங்கம் செய்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் ஆஸ்ரம நுழைவாயில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.