உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோட்டில் வள்ளலார் 196வது அவதார நாள் விழா

ஈரோட்டில் வள்ளலார் 196வது அவதார நாள் விழா

ஈரோடு: ஈரோட்டில் நடந்த, வள்ளலார் அவதார விழாவில், திரளான மக்கள் கலந்து கொண்டனர். அருட்பிரகாச வள்ளலாரின், 196வது அவதார நாள் விழா, ஈரோடு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின், 70வது ஆண்டு விழா, ஈரோடு சத்திய தருமச் சாலையின், 29வது ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.

சன்மார்க்க வாழ்நாள் சாதனையாளர் பொன்மணி கிருஷ்ணன், வள்ளலார் நெறிகள் பற்றி பேசினார். திருவருட்பா விளக்கம், இசை நிகழ்ச்சி, ஈரோடு அரசு இசைப்பள்ளி மாணவர்களின், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

அனுமந்தராயன் கோவில் வீதியில் உள்ள, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாலையில், கொடியேற்று விழா நேற்று (நவம்., 2ல்) நடந்தது. இதையடுத்து செற்பொழிவு நடந்தது. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க, ஈரோடு தலைவர் பொன்சிவஞானம் பேசினார். சங்க நிர்வாகிகள், எஸ்.எஸ்.எம்., கல்வி நிறுவன மதிவாணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா நிறைவாக, வள்ளலார் பெரிதும் வலியுறுத்திக் கூறியது உருவ வழிபாடா? ஒளி வழிபாடா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !