பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் இன்று ஆராதனை
திருக்கோவிலூர்:பகவான் யோகி ராம்சுரத்குமார் குரு மகராஜின், பதினொன்றாம் ஆண்டு ஆராதனை விழா இன்று நடக்கிறது.திருவண்ணாமலையில் உள்ள பகவான் ஆசிரம வளாகத்தில், குரு மகராஜின் பதினொன்றாம் ஆண்டு ஆராதனை விழா இன்று நடக்கிறது. காலை, 6.30 மணிக்கு ஹோமம், அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடக்கிறது. முற்பகல், 11 மணிக்கு பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (18ம் தேதி) காலை 6.30 மணிக்கு மகன்யாசம், அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. காலை, 9 மணிக்கு தபோவனம் பூஜ்யஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில், தீர்த்த நாராயண பூஜை நடக்கிறது. முற்பகல், 11 மணிக்கு பக்தர்களின் பஜனை, மாலை, 3.30 மணிக்கு சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 5.15 மணிக்கு ரமாகாந்த்ராய் எழுதிய பரமாத்மாவுடன் ஆத்மாவின் சந்திப்பு என்ற, பகவானின் வாழ்க்கை வரலாறு அடங்கிய இந்தி புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. இரவு, 8 மணிக்கு பகவானின் உற்சவ மூர்த்தியுடன் வெள்ளி ரத ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் செய்து வருகிறார்.