உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் கல்லூரி மாணவர் சபரிமலை பயணம்

திருப்பூரில் கல்லூரி மாணவர் சபரிமலை பயணம்

திருப்பூர்:திருப்பூரில் இருந்து கல்லூரி மாணவர்கள், 60 பேர் நேற்று சபரிமலை புறப்பட்டு சென்றனர்.அகில பாரத ஐயப்ப சேவா சங்க, திருப்பூர் மாவட்ட கிளை் சார்பில், சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரியை சேர்ந்த, சேவையில் ஆர்வமுள்ள மாணவர்கள் பத்து நாட்களுக்கு இங்கிருந்து சபரிமலை அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளை சேர்ந்த, மாணவர்கள் பத்து பேரை, சுழற்சி முறையில், சபரிமலைக்கு அழைத்து செல்கின்றனர். அவ்வகையில், பல்லடம் அருகேயுள்ள சின்னக்கரை பார்க்ஸ் கல்லூரியில் இருந்து, 60 மாணவர்கள், நேற்று (டிசம்., 7ல்) சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.அகில பாரத ஐயப்ப சங்க மாவட்ட தலைவர் கோபால், செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞர் அணி சுனில்குமாரும் உடன்சென்றனர். பத்து நாட்கள், சபரிமலையில் தங்கும், பக்தர்களுக்கு மருத்துவ முகாமில், சேவையாற்றி, வரும், 19ம் தேதி திருப்பூர் திரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !