உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம்

காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் துவக்க நிகழ்ச்சியாக இன்று (டிசம்., 8ல்), பகல் பத்து உற்சவம் துவங்குகிறது.கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவிலாகும்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா, இன்று (டிசம்., 8ல்) காலை பகல் பத்து உற்சவம் எனும், பெரிய திருமொழி திருநாளுடன் துவங்குகிறது.

இதில், திருமங்கையாழ்வார் அருளிய திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல் உள்ளிட்ட திவ்ய பிரபந்தங்களை கோவில் ஸ்தலத்தார்கள் நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாச பட்டாச்சாரியர் ஆகியோருடன் கோவில் அர்ச்சகர்களும், அரங்கநாதப் பெருமாள் சுவாமி முன்பு பாடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !