உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லக்கோட்டை முருகன் கோவில் கோவில் குளத்தை சுற்றி மின் விளக்கு இல்லை

வல்லக்கோட்டை முருகன் கோவில் கோவில் குளத்தை சுற்றி மின் விளக்கு இல்லை

வல்லக்கோட்டை: வல்லக்கோட்டை முருகன் கோவில் குளத்தை சுற்றி, மின் விளக்கு அமைக்காததால், இருள்சூழ்ந்து காணப்படுகிறது.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில், பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த குளக்கரையை சுற்றி உள்ள கம்பங்களில் மின்விளக்குகள் இல்லை.இருள் சூழ்ந்து காணப்படுவதால், விசேஷ நாட்களில் குவியும் பக்தர்கள், அவதியடைகின்றனர்.மின் விளக்கு அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !