உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெருசலேம் செல்ல நிதியுதவி வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் செல்ல நிதியுதவி வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள, தமிழக அரசால், ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இது, பெத்லஹேம், ஜெருசலம், நாசரேத், ஜோர்டன் நதி, கலிலியோ சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்பயணம், இம்மாத இறுதி, அடுத்த மாதம் ஜனவரி முதல் செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் வரை உள்ள இப்பயணத்துக்கான விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
இதற்கான விதிமுறைகளை www.bcmbcmw.tn.gov.in .என்ற இணைய முகவரியில் காணலாம். விண்ணப்பங்களை, ஜெருசலேம் புனித பயணத்துக்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், கல்சமஹால் பாரம்பரிய கட்டட முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-5, என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !