விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி சிலை பிரதிஷ்டை
ADDED :2535 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, இரும்பேடு பகுதியில், நேற்று, 15 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி மகா பிரதிஷ்டை நடந்தது. இதை முன்னிட்டு, திருக்கோவிலூர் மடாதிபதி ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் தலைமையில், அங்குரார்ப்பணம், வாஸ்து ?ஹாமம் நடந்தது. பின், அஷ்டபந்தனம் சாற்றுதல், கோ பூஜை, கண் திறப்பு, ?ஹாமம், மகா திருமஞ்சனம், கலச புறப்பாடு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.