உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக பூஜைகள் நடந்தது. அபிராமி அம்மன் கோயிலில் 1008 சங்குகள், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயிலில் 108 சங்குகள், ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதில் நிரப்பியிருந்த தீர்த்தங்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிராமி அம்மன் கோயிலில் 1008 சங்குகளால் சிவபெருமான் போல வடிவமைத்து வைத்திருந்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !