தும்பைப்பட்டி, சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் சோமவார சங்காபிஷேகம்
ADDED :2850 days ago
தும்பைப்பட்டி, சிவாலயபுரம், சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார 108 சங்காபிஷேக வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றத. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.