கல்பாத்தி கோவில்களில் தேரோட்டம் துவக்கம்: தேரை வடம் பிடித்து பக்தர்கள் பரவசம்
பாலக்காடு: பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் இன்று துவங்கியது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர்தி ருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று துவங்கியது. இதை முன்னிட்டு, சுவாமிக்கும், அம் பாளுக்கும் நடந்த திருக் கல்யாணத்தை பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், கணபதி சுவாமிகள், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் எழுந்தருளினர். பக்தர்கள் கைலாசபதே, மகாகணபதிக்கு ஜெய், சுப்ரமணிய சுவாமிக்கு ஜெய் என கோஷங்களை முழங்கியபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். பக்தர்கள் தேரை இழுப் பதற்கு உதவியாக, பொக்லைன் தேரை பின்னாலிருந்து முட்டுக்கொடுத்து தள்ளியது. கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் தேர்கள் பவனி வந்தன. காலை 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின், இரண்டாம் நாளான நாளை மந்தக்கரை மகா கணபதி கோவில் தேர், வீதிகளில் வலம் வருகிறது. நாளை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேரோட்டமும், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில் தேரோட்டமும் துவங்குகின்றன. 16ம் தேதி மாலை, 6:00 மணிக்கு விசாலாட்சி விஸ்வநாதர் சமேத கோவில் அருகே, தேர் திரு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது.