/
கோயில்கள் செய்திகள் / கந்த சஷ்டி ஐந்தாம் நாள்: சிறப்பு அலங்காரத்தில் திருத்தணி முருகன் அருள்பாலிப்பு
கந்த சஷ்டி ஐந்தாம் நாள்: சிறப்பு அலங்காரத்தில் திருத்தணி முருகன் அருள்பாலிப்பு
ADDED :13 minutes ago
திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான இன்று காவடி மண்டபத்தில் வள்ளி – தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10ம் தேதி கோலாகலமாக துவங்கியது. விழாவில் காவடி மண்டபத்தில் உற்சவருக்கு லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி ஐந்தாம் நாள் விழாவை முன்னிட்டு வள்ளி – தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.நாளை 15ம் தேதி காலையில் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும், மாலை 5:00 மணிக்கு காவடி மண்டபத்தில் சண்முகர் புறப்பாடும் நடைபெறுகிறது.