பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்
ADDED :2593 days ago
ஒட்டன்சத்திரம்: தைப்பூசத்தை யொட்டி, பழநிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சன்னதி அருகே, எல். என். திருமண மண்டபத்தில், பழநிமுருகன் அன்னதானக் குடில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, சிறுவாபுரி முருகன் புகழ்பாடும், அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு, ஒன்பதாம் ஆண்டாக இந்த குடிலை, அமைத்துள்ளது. ஜனவரி, 18ம் தேதி மாலையில் பக்தி இன்னிசை, கூட்டு வழிபாடுடன் அன்னதானம் துவங்குகிறது. 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு மஹா சக்தி வேல்பூஜை - வேல் மாறல் பாராயணம் நடக்கிறது. பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அன்னதானத்தில் பங்கேற்க விரும்புபவர்கள், சேவையாற்ற விரும்புபவர்கள்
தொடர்புக்கு: 99443 09719; 98421 98889.