உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமனுார் ஐயப்பன் ஆராட்டு விழா

சின்னமனுார் ஐயப்பன் ஆராட்டு விழா

சின்னமனுார்: சின்னமனுார் மணி மண்டபத்தில் ஐயப்பன் பக்த பஜனை மடம் சார்பில்  நவ. 29ல்  லட்சம் முறை ஐயப்பன் திருநாமம் கூறி அர்ச்சனை செய்யும் லட்சார்ச்சனை நிகழ்ச்சி துவங்கியது. தினமும்  12 குருசாமிகள் ,  108 திருநாமம் கூறி அர்ச்சனை செய்தனர்.நிறைவாக முல்லை பெரியாற்றில் ஐயப்பன் ஆராட்டு விழா நடந்தது. பக்த பஜனை மடத்தின் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். குருசாமி லோகேந்திர ராஜன் ஆராட்டு நடத்தினார். ஏராளமானோர் பங்கேற்றனர். லட்சுமி நாராயணன் கோயிலில் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !