கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், 108 சங்காபிஷேகம்
ADDED :2797 days ago
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், கார்த்திகை கடைசி சோமவார சங்கா பிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு, திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பூஜை துவங்கியது. மெய்கண்ட சித்தர் குகையில், 108 சங்குகள் ஓம் வடிவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வேதி தீர்த்தம் நிரப்பப்பட்டு, மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. பின்னர், சோமலிங்கசுவாமி, நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.