பொள்ளாச்சி அமணீஸ்வரர் கோவிலில் சங்காபிேஷக வழிபாடு
ADDED :2527 days ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், சங்காபிஷேகம்ம் வழிபாடு நேற்று நடந்தது.உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் யாகம் மற்றும் சங்காபிஷேக பூஜை, பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில் நேற்று (டிசம்., 10ல்) நடந்தது.
நேற்று முன்தினம் (டிசம்., 9ல்), சகல தேவதா பிரார்த்தனை, விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், அனுக்ஞை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், சங்குஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 108 சங்குகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, நேற்று (டிசம்., 10ல்) யாக பூஜை, கடம்புறப்பாடு, சங்காபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, அமணீஸ்வரர், அருள்நாயகி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.