சிக்கல் ஐயப்பன் கோயிலில் கன்னிச்சாமி பூஜை
ADDED :2527 days ago
சிக்கல்:சிக்கல் சிவதர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்கான கூட்டு வழிபாடு நடந்தது. நேற்று (நவம்., 10ல்) மாலை முதல்முறையாக சபரிமலை செல்லும் கன்னிச் சாமிகளுக்கான சக்தி பூஜை நடந்தது. மூலவர் சிவதர்மசாஸ்தாவிற்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகளும் பஜனை, ஐயப்பன் நாமாவளி, ஸ்தோத்திரம், பாராயணம் செய்யப்பட்டது.
அன்னதானத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சிக்கல் சிவதர்மசாஸ்தா கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.