விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் வரும் 23ல் ஆருத்ரா தரிசன விழா
திருவாரூர் : திருவாரூர் அருகில் உள்ள விளமலில் அமைந்துள்ள பதஞ்சலி மனோகரர் கோயிலில் 15- ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடராஜப்பெருமான் லிங்கத்தில் எழுந்தருளி அ/மி. பதஞ்சலி - வியாக்கிரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் காட்டி அருளுவது ஆருத்ரா தரிசனம் ஆகும்.
நிகழ்ச்சி நிரல்
22.12.2018: சனிக்கிழமை - இரவு 7.30 மணியளவில் திருச்சபையில் அ/மி. நடராஜபெருமான், பதஞ்சலி -வியாக்கிரபாத முனிவர்களுக்கு அபிஷேகம் நடைபெறும்.
23.12.2018: ஞாயிற்றுக்கிழமை - அதிகாலை 4.30 மணிக்கு அ/மி. நடராஜ பெருமான் லிங்கத்தில் எழுந்தருளி அ/மி. பதஞ்சலி - வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு பாத தரிசனம் அருளுதல்.
அதிகாலை 4.45 மணிக்கு அ/மி. பதஞ்சலி - வியாக்கிரபாத மகரிஷிகள் அ/மி. தியாகராஜா சுவாமி திருக்கோயில் செல்லுதல்.
காலை 6.00 மணிக்கு அ/மி. பதஞ்சலி - வியாக்கிரபாத முனிவர்களுக்கு அ/மி. தியாகேசப் பெருமான் பாததரிசனம் காட்சி அருளுதல்.
அன்று அதிகாலை 4.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை லிங்கத்தில் நடராஜப் பெருமான் பாததரிசனத்தில் காணலாம்.
அன்றைய தின்ம் வேதபாராயணம் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். மதியம் 11.30 மணி முதல் 3.00 மணி வரை அன்னதானம் நடைபெறும்.