காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில் சதுர்த்தி விழா
ADDED :2760 days ago
கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில், சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் அகவல் பாராயணம், விசஷே பூஜை, மகா தீபாராதனை நடந்தது.கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி விநாயகர், மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சதுர்த்திசிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.