செய்யாறு நட்சத்திர கோவிலில் நாக தோஷ நிவர்த்தி பூஜை
ADDED :2528 days ago
செய்யாறு: நட்சத்திர விநாயகர் கோவிலில் நடந்த நாகதோஷ நிவர்த்தி பூஜையில், ஏராளமானோர் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, கூழமந்தத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும், 27 நட்சத்திர கோவிலில், நாக தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, நட்சத்திர விநாயகர், 27 நட்சத்திர அதி தேவதைகள், சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பஞ்ச கலச ஸ்தாபனம், ஹோமம், நாகதோஷம் உள்ளவர்களுக்கு, தோஷ நிவர்த்தி, 1,008 ஜெப சிறப்பு பூஜை நடந்தது. ராகு, கேது சிறப்பு கலசாபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.