தி.மலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் பரிகார பூஜை
ADDED :2528 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபமேற்றிய மலை உச்சியில், பரிகார பூஜை நடந்தது.
திருவண்ணாமலையில் உள்ள, 14 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவில் கடந்த, 23ல், 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் தீபம் எரிந்தது. மலை உச்சியில் பக்தர்கள் ஏறிச் சென்று, மஹா தீபத்தை வழிபட்டனர். பக்தர்கள் மலை மேல் ஏறியதால், பரிகார பூஜை, நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சிறப்பு யாக சாலை பூஜை நடந்தது. அதன்பின், மலை உச்சிக்கு கலசநீர் கொண்டு செல்லப்பட்டு, அருணாசலேஸ்வரர் சுவாமி பாதத்துக்கு, பரிகார அபி?ஷகம் செய்யப்பட்டது.