நாட்டரசன்கோட்டையில் 14 அடியில் முருகன் சிலை
ADDED :2528 days ago
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை வீரப்பன் கல்யாணி மூத்தோர் நலமகம் மையம் முன்புறம் 14 அடியில் நலமகம் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இச்சிலை மலேசியா நாட்டின் பத்துமலை முருகனை போன்று உருவாக்கப்பட்டது. நேற்று முருகன் சிலை கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வீரப்பன் கல்யாணி மூத்தோர் நலமக நிறுவனர் கூறியதாவது: அறுபது வயதிற்கு மேற்பட்டோர் தங்களது இறுதி காலத்தை கழிக்க நலமகம் மையம் அமைக்கப்பட்டது. முதியோருக்கு உணவு, மருத்துவம், நுாலகம், உடற்பயிற்சி, இன்டர்நெட், கணினியகம், ஆன்மிக கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் எளிதில் தரிசனம் செய்ய வசதியாக முருகன் சிலையை அமைத்தோம். இச்சிலை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலேசியா பத்துமலை முருகனை போன்று உருவாக்கினோம், என்றார்.