சோலைமலை முருகன் கோயில் உண்டியல் திறப்பு
ADDED :2602 days ago
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள் சஷ்டி மண்டபத்தில் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.தங்கம் 18 கிராம், வெள்ளி 553 கிராம், 10 லட்சத்து 24 ஆயிரத்து 538 ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு டாலர் நோட்டுகள் இருந்தன. நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி அனிதா, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி பங்கேற்றனர்.