சபரிமலையில் நெய் அபிஷேகம் தொடங்கியது எப்போது?
ADDED :2524 days ago
1800ம் ஆண்டுவரையிலும் ‘தாரு சிலை ’ எனப்படும் மரத்தாலான விக்கிரக வடிவத்திலேயே இருந்தார் சுவாமி ஐயப்பன். அதனால் அப்போது அவருக்கு நெய்யபிஷேகம் நேரடியாகச் செய்யும் வழக்கம் இல்லை. அதனால் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை, நெய்த்தோணியில் கொட்டிவிடும் பழக்கம் இருந்தது. இன்றைக்கும் பழைமையான கேரள பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் நெய்யை நேரடியாக பகவானுக்கு அபிஷேகிக்கக் கொடுக்காமல், நெய்த் தோணியில் கொட்டி விடுகிறார்கள். அதிலிருந்தே சிறிது நெய்யைப் பிரசாதமாகக் கொண்டு செல்கிறார்கள்.