ஆதிமூர்த்தி கோவிலில் கருடசேவை
ADDED :2525 days ago
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதுாரில் உள்ள மிகப்பழமையான ஆதிமூர்த்தி பெருமாள் திருக்கோவிலில், முதன் முறையாக பிரம்மோற்சவ விழாநடந்தது.கடந்த சனிக்கிழமை பிரம்மோற்சவ விழா, கருடக் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவில், பிற்பகல், 3:00 மணிக்கு பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.மூன்றாம் நாள் மாலை, முக்கிய நிகழ்வான கருடசேவை நடந்தது.நான்காம் நாள் பெருமாளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து, பெருமாள் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலைச் சுற்றி வலம் வந்தார். பின்னர் தங்கக் கொடிமரத்திலிருந்து கருடக் கொடி இறக்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.