உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துார் கோயிலில் சம்பக சஷ்டி விழா நிறைவு

திருப்புத்துார் கோயிலில் சம்பக சஷ்டி விழா நிறைவு

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பக சஷ்டி விழா நிறைவடைந்தது.இக்கோயிலில் யோகநிலையில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு கார்த்திகை வளர்பிறை பிரதமை திதியன்று சம்பக சஷ்டி விழா துவங்கி ஆறு நாட்கள் நடைபெறும். பூமியை தண்ணீருக்குள் மூழ்கடித்த இரண்யாசன் என்ற சூரனின் மகன்கள் அந்தகாசூரன், சம்பகாசூரன். இவர்கள் தேவர்களை இன்னல்களுக்கு ஆளாக்கியதை அடுத்து பைரவர் அவர்களை சம்ஹாரம் செய்ததை நினைவுகூறும் வகையில் இவ்விழா நடைபெறுகிறது. டிச.8 ல் பைரவர் சன்னதி முன்மண்டபத்தில் யாகசாலையில் அஷ்டபைரவர் யாகத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை,மாலை யாகம் நடந்து யாககலசங்களில் உள்ள புனித நீரால் அபிேஷகம் நடந்து மூலவர் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். 5ம் நாள் விழாவில் ஐந்துகோயில் தேவஸ்தான ஆதீனகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பங்கேற்றார். நிறைவு நாளில் பக்தர்கள் யாகசாலை பூஜைகளில் பங்கேற்றனர். ஏற்பாட்டினை ஐந்துகோயில் தேவஸ்தானம், சம்பகசஷ்டி விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !