சபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு
சபரிமலை: சபரிமலையில் உதயாஸ்தமன பூஜை 2027-ம் ஆண்டு வரையும் படிபூஜை 2036ம் ஆண்டு வரையும் முன்பதிவு முடிந்துள்ளது.சபரிமலையில் முக்கியமானதும், அதிக செலவும் உடையது படிபூஜை. 18 படிகளிலும் பட்டு விரித்து, தேங்காய், குத்து விளக்கேற்றி ஒன்றரை மணி நேரத்திற்கு படிபூஜை நடக்கும்.
இந்த நேரத்தில் பக்தர்கள் படியேற முடியாது என்பதால் மண்டல, -மகரவிளக்கு பூஜை காலத்தில் படிபூஜை கிடையாது.இதற்கு கட்டணம் 75 ஆயிரம் ரூபாய். இதற்கான முன்பதிவு 2036ம் ஆண்டு வரை நிறைவு பெற்று விட்டது. காலை உஷபூஜையில் தொடங்கி இரவு அத்தாழபூஜை வரை நடக்கும் அனைத்து பூஜைகளும் உதயாஸ்தமன பூஜை என அழைக்கப் படுகிறது. இதற்கு கட்டணம் 40 ஆயிரம் ரூபாய். இதற்கான முன்பதிவு 2027 வரை நிறைவு பெற்றுள்ளது.மற்ற பூஜைகளுக்கு கட்டண விபரம்:சகஸ்ரகலசம் -ரூ.50 ஆயிரம், உற்சவபலி- ரூ.30 ஆயிரம், களபாபிஷேகம் ரூ.22,500, புஷ்பாபிஷேகம் ரூ.10 ஆயிரம், அஷ்டாபிஷேகம் ரூ.5,000, பகவதி சேவை - ரூ. 2,000, கணபதிஹோமம் ரூ.-300, நவக்கிரகபூஜை ரூ.-250, பஞ்சாமிர்த அபிஷேகம் ரூ.-100, ஐயப்ப சக்கரம் -ரூ.200, நெய் அபிஷேகம்- தேங்காய் ஒன்றுக்கு ரூ.10.