உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாதானூர் வேணுகோபால் சுவாமி கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு

வாதானூர் வேணுகோபால் சுவாமி கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு

திருக்கனூர்:வாதானூர் வேணுகோபால் சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதேசி விழா நாளை (டிசம்., 18ல்) நடக்கிறது.திருக்கனூர் அடுத்த வாதானூர் பாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா நாளை (டிசம்., 18ல்) நடக்கிறது.விழாவையொட்டி, இன்று (17 ம் தேதி) மாலை 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, நாளை (18ம் தேதி) காலை 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !