கிருஷ்ணராயபுரம் சிவன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் விழா
ADDED :2598 days ago
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் சோழேஸ்வரர் சிவன் கோவிலில், திருவாசகம் முற்றோதல் மற்றும் திருவாசகம் வேள்வி விழா, கோவில் வளாகத்தில் சிவனடியார்கள் நடத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில், மரகதவல்லி தாயார் உடனுறை, சோழேஸ்வரர் கோவில் உள்ளது. மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, இக்கோவிலில் நேற்று (டிசம்., 16ல்), திருவாசகம் முற்றோதல் மற்றும் திருவாசகம் வேள்வி விழா நடந்தது. சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் மணிக்கவாசகர் சுவாமி சிலையை வைத்து, திருவாசகம் முற்றோதல் நடந்தது. மதியம் சிவனடியார்களுக்கு அன்பர்கள் சார்பில், மகேஷ்வர பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.