உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் ஐயப்ப பக்தர்கள் சார்பில் திருவீதி உலா

குமாரபாளையம் ஐயப்ப பக்தர்கள் சார்பில் திருவீதி உலா

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஸ்ரீ ஐயப்ப சுவாமி பிரார்த்தனை மண்டப சேவா சங்க பக்தர்கள் சார்பில், திருவீதி உலா மற்றும் அபிஷேகம் நடந்தது. மலர்களால் சிறப்பு அலங்காரங் களுடன் ஐயப்பன் அருள் பாலிக்க, 18 வகை அஷ்ட திரவிய அபிஷேக தீர்த்தக்குடங்களுடன், மேள, தாளங்கள் முழங்க நகராட்சி அலுவலகம் அருகே துவங்கியது. கலைமகள் வீதி, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, மேற்கு காலனி உள்ளிட்ட பல்வேறு வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஐயப்பா சுவாமி பிரார்த்தனை மண்டபத்தில் திருவீதி உலா நிறைவு பெற்றது. அதன்பின் மண்டபத்தில், ஐயப்பனுக்கு அஷ்ட திரவிய சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார, ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !