உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

சேலத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

சேலம்: மார்கழி பிறப்பையொட்டி, உலக நன்மை வேண்டி, சேவாபாரதி மகளிர் குழு சார்பில், சேலம், அம்மாபேட்டை காளியம்மன் கோவிலில், நேற்று (டிசம். 16ல்), திருவிளக்கு பூஜை நடந்தது. 16ம் ஆண்டாக நடந்த பூஜையில், 108 பெண் பக்தர்கள், காளியம்மனின், 1,008 நாமங்களை கூறி பூஜை செய்தனர். வளையல், ரவிக்கை துணி, மஞ்சள் குங்கும பூஜை பொருட்கள், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், திருவாவடுதுறை ஆதின சைவ சிந்தாந்த பயிற்சி மையம் சார்பில், உலக நன்மை வேண்டி, வாழப்பாடி, அக்ரஹாரம், திரவுபதியம்மன் கோவிலில், சிறப்பு யாகம் நேற்று (டிசம்., 16ல்) நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !