அய்யப்ப சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்
ADDED :2854 days ago
வில்லியனுார்: ஏழைமாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள அய்யப சுவாமிக்கு திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, 108 சங்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.வில்லியனுார் மார்க்கெட் வீதியில் அமைந்துள்ள தேவி ஏழை மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அய்யப்ப சுவாமிக்கு நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு, சிறப்பு யாகமும், அதனை தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணியளவில் திருவிளக்கு பூஜையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்ப சுவாமி நான்கு மாட வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை வில்லியனுார் அய்யப்ப சுவாமி பக்தர்கள் செய்திருந்தனர்.