உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒடிசா கந்தூனி தேவி கோவிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழிபாடு

ஒடிசா கந்தூனி தேவி கோவிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழிபாடு

ஒடிசா; ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள மா கந்தூனி தேவி கோயில் மற்றும் சிவன் கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று வழிபாடு செய்தார்.


முன்னதாக கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள தப்தபானி வந்த ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. கந்தூனி தேவி கோயிலில் ஜனாதிபதி அனைவரின் அமைதி, செழிப்பு மற்றும் நலனுக்காக அவர் பிரார்த்தனை செய்தார். செல்லும் வழியில் குழந்தைகள் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் ஜனாதிபதி திரௌபதி முர்முவை அன்புடன் வரவேற்றனர். அப்பகுதியின் அன்பான உபசரிப்பு, துடிப்பான கலாச்சாரம் மற்றும் செழுமையான ஆன்மீகப் பாரம்பரியம் வியக்க வைத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பதி மற்றும் முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !